பாடல் 997
தோடு மென்குழை யூடே போரிடு
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தந்தன தானா தானனதான தந்தன தானா தானனதான தந்தன தானா தானனதனதானா
பாடல் வரிகள்
தோடு மென்குழை யூடே போரிடுவாணெ டுங்கயல் போலே யாருயிர்சூறை கொண்டிடு வேல்போ லேதொடர்விழிமானார்
சூத கந்தனி லேமா லாயவர்ஓது மன்றறி யாதே யூழ்வினைசூழும் வெந்துய ராலே தானுயிர்சுழலாதே
ஆடு வெம்பண காகோ தாசனமூறு கண்டிட மேல்வீழ் தோகையிலாரும் வண்கும ரேசா ஆறிருபுயவேளே
ஆரு நின்றரு ளாலே தாடொழஆண்மை தந்தருள் வாழ்வே தாழ்வறஆதி தந்தவ நாயேன் வாழ்வுறஅருள்வாயே
ஓடு வெங்கதி ரோடே சோமனுமூழி யண்டமும் லோகா லோகமுமூரு மந்தர நானா தேவருமடிபேண
ஊழி டம்புயன் வேலா வாலயமூடு தங்கிய மாலா ராதரவோத வெண்டிரை சூர்மார் பூடுறவிடும்வேலா
வேடு கொண்டுள வேடா வேடையவேழ வெம்புலி போலே வேடர்கள்மேவு திண்புன மீதே மாதொடுமிகமாலாய்
மேக மென்குழ லாய்நீ கேளினிவேறு தஞ்சமு நீயே யாமெனவேளை கொண்டபி ரானே வானவர்பெருமாளே.
