உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 996

ஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவ

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தனதான தாத்தன தாத்தனதனதானா

பாடல் வரிகள்

ஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவமீதெ னாக்குரு வார்த்தையையுணராதே

ஏழு பார்க்கும்வி யாக்கிரன் யானெ னாப்பரி தேர்க்கரியேறு மாப்பிறு மாப்புடனரசாகி

தோகை மார்க்கொரு காற்றொலை யாத வேட்கையி னாற்கெடுசோர்வி னாற்கொடி தாக்கையையிழவாமுன்

சோதி காட்டவ ராச்சுத நாத னார்க்கருள் போற்றியதூரி தாப்பர மார்த்தமதருள்வாயே

நாக மேற்றுயில் வார்க்கய னான பேர்க்கரி யார்க்கொருஞான வார்த்தையி னாற்குருபரனாய

நாத நாட்டமு றாப்பல காலும் வேட்கையி னாற்புகல்நாவ லோர்க்கரு ளாற்பதமருள்வாழ்வே

வேக மேற்கொ ளராப்புடை தோகை மேற்கொடு வேற்கொடுவீர மாக்குலை யாக்குலவரைசாய

மோல நாட்டவர் பூக்கொடு வேல போற்றியெ னாத்தொழவேலை கூப்பிட வீக்கியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →