பாடல் 943
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - கண்டசாபு (2 1/2)தனதானத் தனதான தனதானத்தனதான
பாடல் வரிகள்
இறவாமற் பிறவாமல் எனையாள்சற்குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத்தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற்குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப்பெருமாளே.
