பாடல் 944
பந்தப்பொற் பாரப யோதர
- தலம்
- அவிநாசி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்தத்தத் தானன தானனதந்தத்தத் தானன தானனதந்தத்தத் தானன தானனதனதான
பாடல் வரிகள்
பந்தப்பொற் பாரப யோதரமுந்திற் றாடகை மேகலைபண்புற்றுத் தாளொடு மேவியதுகிலோடே
பண்டெச்சிற் சேரியில் வீதியில்கண்டிச்சிச் சாரொடு மேவியெபங்குக்கைக் காசுகொள் வேசியர்பனிநீர்தோய்
கொந்துச்சிப் பூவணி கோதையர்சந்தச்செத் தாமரை வாயினர்கும்பிட்டுப் பாணியர் வீணியரநுராகங்
கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினுமண்டிச்செச் சேயென வானவர்கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரைமறவேனே
அந்தத் தொக் காதியு மாதியும்வந்திக்கத் தானவர் வாழ்வுறும்அண்டத்துப் பாலுற மாமணியொளிவீசி
அங்கத்தைப் பாவைசெய் தாமெனசங்கத்துற் றார்தமி ழோதவுவந்துக்கிட் டார்கழு வேறிடவொருகோடிச்
சந்தச்செக் காளநி சாசரர்வெந்துக்கத் தூளிப டாமெழசண்டைக்கெய்த் தாரம ராபதிகுடியேறத்
தங்கச்செக் கோலசை சேவககொங்கிற்றொக் காரவி நாசியில்தண்டைச்சிக் காரயில் வேல்விடுபெருமாளே.
