பாடல் 873
ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்
- தலம்
- திருநாகேச்சுரம்
- ராகம்
- ரேவதி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (8 1/2)தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி தகதிமி-4தானான தானத் தனத்த தத்தனதானான தானத் தனத்த தத்தனதானான தானத் தனத்த தத்தனதனதான
பாடல் வரிகள்
ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள்ஆமாவி னூனைச் செகுத்த துட்டர்கள்பரதாரம்
ஆகாதே னாமற் பொசித்த துட்டர்கள்நானாவு பாயச் சரித்ர துட்டர்கள்ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள்தமியோர்சொங்
கூசாது சேரப் பறித்த துட்டர்கள்ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள்கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள்குருசேவை
கூடாத பாவத் தவத்த துட்டர்கள்ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்கோமாள நாயிற் கடைப்பி றப்பினிலுழல்வாரே
வீசாவி சாலப் பொருப்பெ டுத்தெறிபேரார வாரச் சமுத்தி ரத்தினில்மீளாம லோடித் துரத்தி யுட்குறுமொருமாவை
வேரோடு வீழத் தறித்த டுக்கியபோராடு சாமர்த் தியத்தி ருக்கையில்வேலாயு தாமெய்த் திருப்பு கழ்ப்பெறுவயலு¡ரா
நாசாதி ப்ராரத் ததுக்க மிக்கவர்மாயாவி காரத் தியக்க றுத்தருள்ஞானோப தேசப் ப்ரசித்த சற்குருவடிவான
நாதாவெ னாமுற் றுதித்தி டப்புவியாதார மாய்கைக் குமுட்ட முற்றருள்நாகேச நாமத் தகப்பன் மெச்சியபெருமாளே.
