உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 874

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை

ராகம்
லதாங்கி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - அங்கதாளம் (7 1/2)தகதிமி தகதிமி-4, தகிட-1 1/2, தகதிமி-2தனதன தனதன தாந்த தானனதனதன தனதன தாந்த தானனதனதன தனதன தாந்த தானனதனதான

பாடல் வரிகள்

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனைவெறியனை நிறைபொறை வேண்டி டாமதசடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணைமீகுகேள்வி

தவநெறி தனைவிடு தாண்டு காலியையவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்சமடனை வலியஅ சாங்க மாகியதமியேனை

விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்விழிவலை மகளிரொ டாங்கு கூடியவினையேனை

வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலுமொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனைவிதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழஅருள்வாயே

ஒருபது சிரமிசை போந்த ராவணனிருபது புயமுட னேந்து மேதியுமொருகணை தனிலற வாங்கு மாயவன்மருகோனே

உ னதடி யவர்புக ழாய்ந்த நூலினரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர்உ யர்கதி பெறஅரு ளோங்கு மாமயிலுறைவோனே

குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொருகளமிசை யறமது தீர்ந்த சூரர்கள்குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழமுனிவோனே

கொடுவிட மதுதனை வாங்கி யேதிருமிடறினி லிருவென ஏந்து மீசுரர்குருபர னெனவரு கூந்த லு¡ருறைபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →