பாடல் 872
மனமெ னும்பொருள் வானறை கால்கனல்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (7 1/2)(எடுப்பு - 1 தள்ளி)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தந்தன தானன தானனதனன தந்தன தானன தானனதனன தந்தன தானன தானனதனதான
பாடல் வரிகள்
மனமெ னும்பொருள் வானறை கால்கனல்புனலு டன்புவி கூடிய தோருடல்வடிவு கொண்டதி லேபதி மூணெழுவகையாலே
வருசு கந்துய ராசையி லேயுழல்மதியை வென்றுப ராபர ஞானநல்வழிபெ றும்படி நாயடி யேனைநினருள்சேராய்
செனனி சங்கரி ஆரணி நாரணிவிமலி யெண்குண பூரணி காரணிசிவைப ரம்பரை யாகிய பார்வதிஅருள்பாலா
சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெறஅசுரர் தங்கிளை யானது வேரறசிவனு கந்தருள் கூர்தரு வேல்விடுமுருகோனே
கனக னங்கையி னாலறை தூணிடைமனித சிங்கம் தாய்வரை பார்திசைகடல்க லங்கிட வேபொரு தேயுகிர்முனையாலே
கதற வென்றுடல் கீணவ னாருயிருதிர முஞ்சித றாதமு தாயுணுகமல வுந்திய னாகிய மால்திருமருகோனே
தினக ரன்சிலை வேளருள் மாதவர்சுரர்க ளிந்திர னாருர காதிபர்திசைமு கன்செழு மாமறை யோர்புகழழகோனே
திரும டந்தையர் நாலிரு வோர்நிறைஅகமொ டம்பொனி னாலய நீடியசிவபு ரந்தனில் வாழ்குரு நாயகபெருமாளே.
