பாடல் 829
மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொ
- தலம்
- நாகப்பட்டினம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தந்ததன தந்ததன தந்ததனதான தந்ததன தந்ததன தந்ததனதான தந்ததன தந்ததன தந்ததனதந்ததான
பாடல் வரிகள்
மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொடார மும்படித ரம்பொறியு டன்பணிகள்மாலை யொண்பவள மும்பரிம ளங்கலவைதொங்கலாட
வாள்ச ரங்கணிய லுங்குழைத ளம்பளகபார தொங்கலணி பெண்கள்வத னங்கள்மதிவாகை யென்பஇத ழுஞ்சலச மென்பகளசங்குமோக
சார மஞ்சள்புய முங்கிளிமு கங்களுகிர்பாளி தம்புனைது வண்டிடையொ டின்பரசதாழி யென்பஅல்கு லுந்துளிர ரம்பைதொடைரம்பைமாதர்
தாள்ச தங்கைகொலு சுங்குலசி லம்புமணியாடல் கொண்டமட மங்கையரு டன்கலவிதாக முண்டுழல்கி னுங்கழலு றுங்கழல்மறந்திடேனே
வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுரசோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும்வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவடர்ந்தசூரன்
வீற டங்கமுகி லுங்கமற நஞ்சுடையஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடுமேகொ ளுந்தபல்சி ரந்தனையெ றிந்துநடனங்கொள்வேலா
நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணியோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலிராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர்தந்த்முல
ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொருதாய ணங்குகுற மங்கையைம ணந்தபுயநாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர்புகழ்தம்பிரானே.
