பாடல் 828
ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
- தலம்
- நாகப்பட்டினம்
- ராகம்
- ஜோன்புரி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதி - திஸ்ரநடை (12)தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்ததான தத்த தத்த தந்ததனதான
பாடல் வரிகள்
ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்தஊர்மு கிற்ற ருக்க ளொன்றுமவராரென்
று¡ம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்ஊன ரைப்ர புக்க ளென்றுமறியாமற்
கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்க ரைத்த நந்தகோடி யிச்சை செப்பி வம்பிலுழல்நாயேன்
கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்துகூடு தற்கு முத்தி யென்றுதருவாயே
வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்மாது பெற்றெ டுத்து கந்தசிறியோனே
வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்தவாகை மற்பு யப்ர சண்டமயில்வீரா
ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்றநார ணற்க ருட்சு ரந்தமருகோனே
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்தநாக பட்டி னத்த மர்ந்தபெருமாளே.
