உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 830

விழுதா தெனவே கருதா துடலை

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - ஆதிதனனா தனனா தனனா தனனாதனனா தனனாதனதான

பாடல் வரிகள்

விழுதா தெனவே கருதா துடலைவினைசேர் வதுவேபுரிதாக

விருதா வினிலே யுலகா யதமேலிடவே மடவார்மயலாலே

அழுதா கெடவே அவமா கிடநாளடைவே கழியாதுனையோதி

அலர்தா ளடியே னுறவாய் மருவோரழியா வரமேதருவாயே

தொழுதார் வினைவே ரடியோ டறவேதுகள்தீர் பரமேதருதேவா

சுரர்பூபதியே கருணா லயனேசுகிர்தா வடியார்பெருவாழ்வே

எழுதா மறைமா முடிவே வடிவேலிறைவா எனையாளுடையோனே

இறைவா எதுதா வதுதா தனையேஇணைநா கையில்வாழ்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →