உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 546

கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ

தலம்
மயிலம்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதந்த தானன தானா தானாதனதந்த தானன தானா தானாதனதந்த தானன தானா தானாதனதான

பாடல் வரிகள்

கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோவிடமிஞ்சு பாதக வேலோ சேலோகுழைகொண்டு லாவிய மீனோ மானோஎனுமானார்

குயில்தங்கு மாமொழி யாலே நேரேயிழைதங்கு நூலிடை யாலே மீதூர்குளிர்கொங்கை மேருவி னாலே நானாவிதமாகி

உலைகொண்ட மாமெழு காயே மோகாயலையம்பு ராசியி னு஡டே மூழ்காவுடல்பஞ்ச பாதக மாயா நோயாலழிவேனோ

உறுதண்ட பாசமொ டாரா வாராஎனையண்டி யேநம னார்தூ தானோர்உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதாளருள்வாயே

அலைகொண்ட வாரிதி கோகோ கோகோஎனநின்று வாய்விட வேநீள் மாசூரணியஞ்ச ராசனம் வேறாய் நீறாயிடவேதான்

அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீரனலங்கை வேல்விடும் வீரா தீராஅருமந்த ரூபக ஏகா வேறோர்வடிவாகி

மலைகொண்ட வேடுவர் கானு஡ டேபோய்குறமங்கை யாளுட னேமா லாயேமயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ்குமரேசா

மதிமிஞ்சு போதக வேலா ஆளாமகிழ்சம்பு வேதொழு பாதா நாதாமயிலந்தண் மாமலை வாழ்வே வானோர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →