Song 546
கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ
- Sthalam
- மயிலம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதந்த தானன தானா தானாதனதந்த தானன தானா தானாதனதந்த தானன தானா தானாதனதான
Lyrics
கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோவிடமிஞ்சு பாதக வேலோ சேலோகுழைகொண்டு லாவிய மீனோ மானோஎனுமானார்
குயில்தங்கு மாமொழி யாலே நேரேயிழைதங்கு நூலிடை யாலே மீதூர்குளிர்கொங்கை மேருவி னாலே நானாவிதமாகி
உலைகொண்ட மாமெழு காயே மோகாயலையம்பு ராசியி னுடே மூழ்காவுடல்பஞ்ச பாதக மாயா நோயாலழிவேனோ
உறுதண்ட பாசமொ டாரா வாராஎனையண்டி யேநம னார்தூ தானோர்உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதாளருள்வாயே
அலைகொண்ட வாரிதி கோகோ கோகோஎனநின்று வாய்விட வேநீள் மாசூரணியஞ்ச ராசனம் வேறாய் நீறாயிடவேதான்
அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீரனலங்கை வேல்விடும் வீரா தீராஅருமந்த ரூபக ஏகா வேறோர்வடிவாகி
மலைகொண்ட வேடுவர் கானு டேபோய்குறமங்கை யாளுட னேமா லாயேமயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ்குமரேசா
மதிமிஞ்சு போதக வேலா ஆளாமகிழ்சம்பு வேதொழு பாதா நாதாமயிலந்தண் மாமலை வாழ்வே வானோர்பெருமாளே.
