Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 545

நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்த

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தானதன தான தந்த தானதன தான தந்ததானதன தான தந்ததனதான

Lyrics

நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்தகாரமிக வேநி றைந்தகுழலாலும்

நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ரனேர்தருமு கார விந்தமதனாலும்

ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள்ஆசைவலை வீசு கெண்டைவிழியாலும்

ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்தனாகிமயல் நானு ழன்றுதிரிவேனோ

கோலவுரு வாயெ ழுந்து பாரதனை யேயி டந்துகூவிடு முராரி விண்டுதிருமார்பன்

கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ ழுந்தகோபவரி நார சிங்கன்மருகோனே

பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள்பேர்பெரிய வேல்கொள் செங்கைமுருகோனே

பேடைமட ஓதி மங்கள் கூடிவிளை யாடு கின்றபேறைநகர் வாழ வந்தபெருமாளே.

All songs →