பாடல் 547
அங்கை நீட்டிய ழைத்துப் பாரிய
- தலம்
- திருசிராப்பள்ளி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்த தாத்தன தத்தத் தானனதந்த தாத்தன தத்தத் தானனதந்த தாத்தன தத்தத் தானனதனதான
பாடல் வரிகள்
அங்கை நீட்டிய ழைத்துப் பாரியகொங்கை காட்டிம றைத்துச் சீரியஅன்பு போற்பொய்ந டித்துக் காசளவுறவாடி
அம்பு தோற்றக ணிட்டுத் தோதகஇன்ப சாஸ்த்ரமு ரைத்துக் கோகிலம்அன்றில் போற்குர லிட்டுக் கூரியநகரேகை
பங்க மாக்கிய லைத்துத் தாடனைகொண்டு வேட்கையெ ழுப்பிக் காமுகர்பண்பில் வாய்க்கம யக்கிக் கூடுதலியல்பாகப்
பண்டி ராப்பகல் கற்றுச் சூளைகள்தங்கள் மேற்ப்ரமை விட்டுப் பார்வதிபங்கர் போற்றிய பத்மத் தாள்தொழஅருள்வாயே
எங்கு மாய்க்குறை வற்றுச் சேதனஅங் மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும்இன்ப மாய்ப்புகழ் முப்பத் தாறினின்முடிவேறாய்
இந்த்ர கோட்டிம யக்கத் தான்மிகமந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமதமின்றி வாழ்த்திய சொர்க்கக் காவலவயலுரா
செங்கை வேற்கொடு துட்டச் சூரனைவென்று தோற்பறை கொட்டக் கூளிகள்தின்று கூத்துந டிக்கத் தோகையில்வரும்வீரா
செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுரமஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தருதென்சி ராப்பள்ளி வெற்பிற் றேவர்கள்பெருமாளே.
