உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 548

அந்தோமன மேநம தாக்கையை

ராகம்
கல்யாணி
தாளம்
திஸ்ர த்ருபுடை (7)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்தாதன தானன தாத்தனதந்தாதன தானன தாத்தனதந்தாதன தானன தாத்தனதனதான

பாடல் வரிகள்

அந்தோமன மேநம தாக்கையைநம்பாதெயி தாகித சூத்திரமம்போருக னாடிய பூட்டிதுஇனிமேல்நாம்

அஞ்சாதமை யாகிரி யாக்கையைபஞ்சாடிய வேலவ னார்க்கியலங்காகுவம் வாஇனி தாக்கையைஒழியாமல்

வந்தோமிது வேகதி யாட்சியுமிந்தாமயில் வாகனர் சீட்டிதுவந்தாளுவம் நாமென வீக்கியசிவநீறும்

வந்தேவெகு வாநமை யாட்கொளுவந்தார்மத மேதினி மேற்கொளமைந்தாகும ராவெனு மார்ப்புயமறவாதே

திந்தோதிமி தீதத மாத்துடிதந்தாதன னாதன தாத்தனசெம்பூரிகை பேரிகை யார்த்தெழமறையோதச்

செங்காடென வேவரு மூர்க்கரைசங்காரசி காமணி வேற்கொடுசெண்டாடிம காமயில் மேற்கொளுமுருகோனே

இந்தோடிதழ் நாகம காக்கடல்கங்காளமி னார்சடை சூட்டியஎன்தாதைச தாசிவ கோத்திரனருள்பாலா

எண்கூடரு ளால்நெளவி நோக்கியைநன்பூமண மேவிசி ராப்பளியென்பார்மன மேதினி நோக்கியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →