பாடல் 413
காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானதன தந்ததன தானதன தந்ததனதானதன தந்ததனதந்த தனதான
பாடல் வரிகள்
காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடியகாகளம டங்கவுமுழங்கு மதனாலே
காலடர வம்பமளி மேலடர வந்துபொருகாமன்விடு விஞ்சுகணைஅஞ்சு மலராலே
ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததெனஓரிரவு வந்தெனதுசிந்தை யழியாதே
ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமுலாவியக டம்பமலர்தந்த ருளுவாயே
ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடையராதிபர வும்படிநினைந்த குருநாதா
ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவியாளுமுர முந்திருவும்அன்பு முடையோனே
மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரியவேலையலை யும்பகையும்அஞ்ச விடும்வேலா
மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிருவீதியிலெ ழுந்தருளிநின்ற பெருமாளே.
