பாடல் 412
காரா டக்குழ லாலா லக்கணை
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானா தத்தன தானா தத்தனதந்தன தந்தன தான தந்தனதானா தத்தன தானா தத்தனதந்தன தந்தன தான தந்தனதானா தத்தன தானா தத்தனதந்தன தந்தன தான தந்தனதந்ததான
பாடல் வரிகள்
காரா டக்குழ லாலா லக்கணைகண்கள் சுழன்றிட வேமு கங்களினாலா பச்சிலை யாலே மெற்புசிமஞ்சள் கலந்தணி வாளி கொந்தளகாதா டக்கலன் மேலா டக்குடியின்ப ரசங்குட மார்ப ளிங்கொளிகொங்கைமாதர்
காசா சைச்செய லாலே சொக்கிடுவிஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்போலே நற்றெரு வூடா டித்துயல்தொங்கல் நெகிழ்ந்திடை யேது வண்டிடகால்தா விச்சதி யோடே சித்திரமென்ப நடம்புரி வாரு டன்செயல்மிஞ்சலாகிச்
சீரா டிச்சில நாள்போய் மெய்த்திரைவந்து கலந்துயி ரோட வங்கமொடூடா டிப்பல நோயோ டுத்தடிகொண்டு குரங்கென வேந டந்துசொல்சீயோ டிக்கிடை பாயோ டுக்கியடங்கி யழிந்துயி ரோடு ளைஞ்சொளியுங்கண்மாறிச்
சேரா மற்பொறி கேளா மற்செவிதுன்பமொ டின்பமு மேம றந்துபின்ஊரார் சுற்றமு மாதோர் மக்களுமண்டியு மண்டையு டேகு விந்திதுசீசீ சிச்சிசி போகா நற்சனியன்கட வென்றிட வேகி டந்துடல்மங்குவேனோ
மாரோன் முப்புர நிறா யுற்றிடஅங்கி யுமிழ்ந்திடு வோரி பம்புலிதோல்சீ யத்தொடெ யேகா சர்ச்சடைகங்கை யிளம்பிறை யார ணிந்தவர்மாடே றிக்கட லாலா லத்தையுமுண்டவ ரெந்தைசி வாநு பங்குறையென்றன்மாதா
மாலோ னுக்கிளை யாள்மா பத்தினியம்பிகை சங்கரி மோக சுந்தரிவேதா மக்கலை ரூபாள் முக்கணிரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள்மாஞா னக்கும ராதோ கைப்பரியின்பத வண்குரு வேயெ னஞ்சுரர்தொண்டுபாடச்
சூரார் மக்கிட மாமே ருக்கிடஅங்கட லெண்கிரி யோடி பங்கொடுதீபே ழற்றிட பாதா ளத்துறைநஞ்சர வின்பண மாயி ரங்கெடசூழ்வா ளக்கிரி தூளா கிப்பொடிவிண்கணி றைந்திட வேந டம்புரிகின்றவேலா
சோர்வே தத்தலை மேலா டிச்சுகபங்கய செங்கர மோட கம்பெறவாகா னக்குற மாதோ டற்புதமங்குல ணங்குட னேம கிழ்ந்துநல்தூணோ டிச்சுட ராகா சத்தையணைந்துவி ளங்கரு ணாச லந்திகழ்தம்பிரானே.
