பாடல் 4
நினது திருவடி சத்திம யிற்கொடி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகஜனு-2தனன தனதன தத்தன தத்தனதனன தனதன த்ததன தத்தனதனன தனதன த்ததன தத்தனதனதான
பாடல் வரிகள்
நினது திருவடி சத்திம யிற்கொடிநினைவு கருதிடு புத்திகொ டுத்திடநிறைய அமுதுசெய் முப்பழ மப்பமுநிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரிநிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும்இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொருமகர சலநிதி வைத்தது திக்கரவளரு கரிமுக ஒற்றைம ருப்பனைவலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடுவளர்கை குழைபிடி தொப்பண குட்டொடுவனச பரிபுர பொற்பத அர்ச்சனைமறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பலசிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்திரளும் உறுசதை பித்தநி ணக்குடல்செறமுளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்நிரைய அரவநி றைத்தக ளத்திடைதிமித திமிதிமி மத்தளி டக்கைகள்செகசேசே
எனவெ துகுதுகு துத்ததென ஒத்துகள்துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிடடிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில்எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிடஇரண பயிரவி சுற்றுந டித்திடஎதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள்பெருமாளே.
