பாடல் 5
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தான தனதனன தானதனதனன தானதனதான
பாடல் வரிகள்
விடமடைசு வேலை அமரர்படை சூலம்விசையன்விடு பாணமெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்வினையின் விளை வேதும்அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாதுகலவிதனில் மூழ்கிவறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடுகழலிணைகள் சேரஅருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போகஇறைவன்மகள் வாய்மைஅறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாதகணபதியெ னாமமுறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூரஅசலுமறி யாமல்அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாடஅறிவருளும் ஆனைமுகவோனே.
