உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 343

சீசி முப்புரக் காடு நீறெழச்

ராகம்
தர்பர்
தாளம்
மிஸ்ரசாபு (3 1/2)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தகிடதகதிமி-3 1/2தான தத்தனத் தான தத்தனத்தான தத்தனத் தான தத்தனத்தான தத்தனத் தான தத்தனத்தனதான

பாடல் வரிகள்

சீசி முப்புரக் காடு நீறெழச்சாடி நித்திரைக் கோசம் வேரறச்சீவன் முத்தியிற் கூட வேகளித்தநுபூதி

சேர அற்புதக் கோல மாமெனச்சூரி யப்புவிக் கேறி யாடுகச்சீலம் வைத்தருட் டேறி யேயிருக்கறியாமற்

பாசம் விட்டுவிட் டோ டி போனதுப்போது மிப்படிக் காகி லேனினிப்பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித்தடியேனைப்

பார டைக்கலக் கோல மாமெனத்தாப ரித்துநித் தார மீதெனப்பாத பத்மநற் போதை யேதரித்தருள்வாயே

தேசில் துட்டநிட் டூர கோதுடைச்சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த்தருள்வோனே

சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்பாணி வித்துருப் பாத னோர்புறச்சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற்குருநாதா

காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்கோவ லத்தியிற் கான நான்மறைக்காடு பொற்கிரிக் காழி யாருர்பொற்புலி஧வ்ளுர்

காள அத்தியப் பால்சி ராமலைத்தேச முற்றுமுப் பூசை மேவிநற்காம கச்சியிற் சால மேவுபொற்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →