பாடல் 342
கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் ...... கொடியார்தங்
- தலம்
- காஞ்சீபுரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானத் தத்தத் தத்தன தத்தத்தனதான
பாடல் வரிகள்
கோவைச் சுத்தத் துப்பத ரத்துக்கொடியார்தங்
கோலக் கச்சுக் கட்டிய முத்தத்தனமேவிப்
பாவத் துக்குத் தக்கவை பற்றித்திரியாதே
பாடப் பத்திச் சித்த மெனக்குத்தரவேணும்
மாவைக் குத்திக் கைத்தற எற்றிப்பொரும்வேலா
மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக்கினியோனே
சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப்பதியோனே
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப்பெருமாளே.
