பாடல் 268
தந்து தானன தனதன தனதன
- தலம்
- திருத்தணிகை
- ராகம்
- நாதநாமக்ரியா
- தாளம்
- அங்கதாளம் (7 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
பாடல் வரிகள்
தந்து தானன தனதன தனதனதந்து தானன தனதன தனதனதந்து தானன தனதன தனதனதனதான
கொந்து வார்குர வடியினு மடியவர்சிந்தை வாரிஜ நடுவினு நெறிபலகொண்ட வேதநன் முடியினு மருவியாகுருநாதா
கொங்கி லேர்தரு பழநியி லறுமுகசெந்தில் காவல தணிகையி லிணையிலிகொந்து காவென மொழிதர வருசமயவிரோத
தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்சந்தி யாதது தனதென வருமொருசம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்துவிரைநீபச்
சஞ்ச ணகரி கரமுரல் தமனியகிண்கி ணீமுக விதபத யுகமலர்தந்த பேரருள் கனவிலு நனவிலுமறவேனே
சிந்து வாரமு மிதழியு மிளநவசந்த்ர ரேகையு மரவமு மணிதருசெஞ்ச டாதரர் திருமக வெனவருமுருகோனே
செண்ப காடவி யினுமித ணினுமுயர்சந்த னாடவி யினுமுறை குறமகள்செம்பொ னுபுற கமலமும் வளையணிபுதுவேயும்
இந்து வாண்முக வனசமு ம்ருகமதகுங்கு மாசல யுகளமு மதுரிதஇந்த ளாம்ருத வசனமு முறுவலுமபிராம
இந்த்ர கோபமு மரகத வடிவமுமிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொருமிந்த்ர நீலமு மடலிடை யெழுதியபெருமாளே.
