உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 269

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

ராகம்
ஆபோகி
தாளம்
கண்டசாபு (2 1/2)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தகிட-1 1/2, தக-1தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்தனத்தன தனத்தம்தனதான

பாடல் வரிகள்

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்செகுத்தவர் ருயிர்க்குஞ்சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்திருப்புகழ் நெருப்பென்றறிவோம்யாம்

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்நிசிக்கரு வறுக்கும்பிறவாமல்

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்நிறைப்புக ழுரைக்குஞ்செயல்தாராய்

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்தகுத்தகு தகுத்தந்தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்தளத்துட னடக்குங்கொடுசூரர்

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்சிரித்தெரி கொளுத்துங்கதிர்வேலா

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்திருத்தணி யிருக்கும்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →