பாடல் 270
சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்
- தலம்
- திருத்தணிகை
- ராகம்
- சாமா
- தாளம்
- ஆதி 2 களை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
(எடுப்பு - 3/4 இடம்)தனத்த தத்தன தனதன தனதனதனத்த தத்தன தனதன தனதனதனத்த தத்தன தனதன தனதனதனதான
பாடல் வரிகள்
சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்செனித்த தெத்தனை திரள்கய லெனபலவதுபோதா
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடைசெழித்த தெத்தனை சிறுதன மயல்கொடுசெடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வதளவேதோ
மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடிகெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்வதைத்த தெத்தனை யளவிலை விதிகரமொழியாமல்
வகுத்த தெத்தனை மசகனை முருடனைமடைக்கு லத்தனை மதியழி விரகனைமலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள்புரிவாயே
தனத்த னத்தன தனதன தனதனதிமித்தி மித்திமி திமிதிமி திமிதிமிதகுத்த குத்தகு தகுதகு தகுதகுதகுதீதோ
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரிதடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடுதமித்த மத்தள தமருக விருதொலிகடல்போலச்
சினத்த மர்க்கள செருதிகழ் குருதியதிமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலைதெறித்தி டக்கழு நரிதின நிணமிசைபொரும்வேலா
செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவமுநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணிதிருத்த ணிப்பதி மருவிய குறமகள்பெருமாளே.
