பாடல் 267
கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை
- தலம்
- திருத்தணிகை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானா தனத்ததன தானா தனத்ததனதானா தனத்ததனதனதான
பாடல் வரிகள்
கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலைகோடா லழைத்துமலரணைமீதே
கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணைகோல்போல் சுழற்றியிடையுடைநாணக்
கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிருகாதோ லையிற்றுவிழவிளையாடுங்
காமா மயர்க்கியர்க ளூடே களித்துநமகானு ருறைக்கலகமொழியாதோ
வீராணம் வெற்றிமுர சோடே தவிற்றிமிலைவேதா கமத்தொலிகள்கடல்போல
வீறாய் முழக்கவரு சூரா ரிறக்கவிடும்வேலா திருத்தணியிலுறைவோனே
மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில்மாபோ தகத்தையருள்குருநாதா
மாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகுமாலோ டனைத்துமகிழ்பெருமாளே.
