உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 2

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை

தாளம்
ஆதி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தத்ததன தத்ததன தத்ததன தத்ததனதத்ததன தத்ததனதனதான

பாடல் வரிகள்

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடைபட்சியெனு முக்ரதுரகமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழியபட்டுருவ விட்டருள்கைவடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதருசிற்றடியு முற்றியபனிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடுசெப்பெனஎ னக்கருள்கைமறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்எட்பொரிய வற்றுவரைஇளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெளரிப்பழமி டிப்பல்வகைதன஧முலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொருவிக்கிநச மர்த்தனெனும்அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்வித்தகம ருப்புடையபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →