உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 18

மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததனதந்தனந் தந்ததனதனதான

பாடல் வரிகள்

மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனெனவண்டினங் கண்டுதொடர்குழல்மாதர்

மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிகவம்பிடுங் கும்பகனதனமார்பில்

ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழையஉந்தியென் கின்றமடுவிழுவேனை

உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்ஒண்டகம் பும்புனையும்அடிசேராய்

பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்பண்டையென் பங்கமணிபவர்சேயே

பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகரபண்டிதன் தம்பியெனும்வயலு஡ரா

சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்செண்பகம் பைம்பொன்மலர்செறிசோலை

திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்தென்பரங் குன்றிலுறைபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →