பாடல் 17
பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தனதனத்தனந் தந்தனதந்ததான
பாடல் வரிகள்
பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றியபிணக்கிடுஞ் சண்டிகள்வஞ்சமாதர்
புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்முருக்குவண் செந்துவர்தந்துபோகும்
அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்அறச்சிவந் தங்கையில்அன்புமேவும்
அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்அருட்பதம் பங்கயம்அன்புறாதோ
மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்விதித்தெணுங் கும்பிடுகந்தவேளே
மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழுமிசைக்கிடுஞ் செந்தமிழ்அங்கவாயா
பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடுதிறற்செழுஞ் சந்தகில்துன்றிநீடு
தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணைதிருப்பரங் குன்றுறைதம்பிரானே.
