பாடல் 19
வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனதான
பாடல் வரிகள்
வடத்தை மிஞ்சிய புளகித வனமுலைதனைத்த றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅருமையினாலே
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெலநகைத்து நண்பொடு வருமிரும் எனஉரைவழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல்தொடுபோதே
விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுளமருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல்விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழுதொழில்தானே
விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்மனத்தை நம்பிய சிறியனை வெறியனைவிரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவதுளதோதான்
குடத்தை வென்றிரு கிரியென எழில்தளதளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறுகுறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவருவடிவேலா
குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்குலத்தொ டும்பட ஒருகணை விடுமரிமருகோனே
திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபடஅயிற்கொ டும்படை விடுசர வணபவதிறற்கு கன்குரு பரனென வருமொருமுருகோனே
செழித்த தண்டலை தொறுமில கியகுடவளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்திருப்ப ரங்கிரி வளநகர் மருவியபெருமாளே.
