பாடல் 20
வரைத்தடங் கொங்கை யாலும்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்தனந் தந்ததான தனத்தனந் தந்ததானதனத்தனந் தந்ததானதனதான
பாடல் வரிகள்
வரைத்தடங் கொங்கை யாலும்வளைப்படுஞ் செங்கை யாலும்மதர்த்திடுங் கெண்டையாலும்அனைவோரும்
வடுப்படுந் தொண்டை யாலும்விரைத்திடுங் கொண்டை யாலும்மருட்டிடுஞ் சிந்தை மாதர்வசமாகி
எரிப்படும் பஞ்சு போலமிகக்கெடுந் தொண்ட னேனும்இனற்படுந் தொந்த வாரிகரையேற
இசைத்திடுஞ் சந்த பேதம்ஒலித்திடுந் தண்டை சூழும்இணைப்பதம் புண்ட ணகம்அருள்வாயே
சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்இளக்ரவுஞ் சந்த னோடுதுளக்கெழுந் தண்ட கோளம்அளவாகத்
துரத்தியன் றிந்த்ர லோகம்அழித்தவன் பொன்று மாறுசுடப்பருஞ் சண்ட வேலைவிடுவோனே
செருக்கெழுந் தும்பர் சேனைதுளக்கவென் றண்ட மூடுதெழித்திடுஞ் சங்க பாணிமருகோனே
தினைப்புனஞ் சென்று லாவுகுறத்தியின் பம்ப ராவுதிருப்பரங் குன்ற மேவுபெருமாளே.
