பாடல் 1294
நாளு மிகுத்த ...... கசிவாகி
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- கமாஸ்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (6 1/2)தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமிதக-3தான தனத்ததனதான
பாடல் வரிகள்
நாளு மிகுத்தகசிவாகி
ஞான நிருத்தமதைநாடும்
ஏழை தனக்குமநுபூதி
ராசி தழைக்கஅருள்வாயே
பூளை யெருக்குமதிநாக
பூண ரளித்தசிறியோனே
வேளை தனக்குசிதமாக
வேழ மழைத்தபெருமாளே.
