பாடல் 1293
நாரியர்க ளாசையைக் ...... கருதாதே
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானதன தானனத்தனதான
பாடல் வரிகள்
நாரியர்க ளாசையைக்கருதாதே
நானுனிரு பாதபத்மமுநாட
ஆரமுத மானசர்க்கரைதேனே
ஆனஅநு பூதியைத்தருவாயே
காரணம தானவுத்தமசீலா
கானகுற மாதினைப்புணர்வோனே
சூரர்கிளை தூளெழப்பொரும்வேலா
தோகைமயில் வாகனப்பெருமாளே.
