பாடல் 1202
வேலொத்து வென்றி யங்கை வேளுக்கு வெஞ்ச ரங்க
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானத்த தந்த தந்த தானத்த தந்த தந்ததானத்த தந்த தந்ததனதான
பாடல் வரிகள்
வேலொத்து வென்றி யங்கை வேளுக்கு வெஞ்ச ரங்களாமிக்க கண்க ளென்றுமிருதோளை
வேயொக்குமென்று கொங்கை மேல்வெற்ப தென்றுகொண்டைமேகத்தை வென்ற தென்றுமெழில்மாதர்
கோலத்தை விஞ்ச வெஞ்சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர்கூடத்தில் நின்று நின்றுகுறியாதே
கோதற்ற நின்ப தங்கள் நேர்பற்றி யின்ப மன்புகூர்கைக்கு வந்து சிந்தைகுறுகாதோ
ஞாலத்தை யன்ற ளந்து வேலைக்கு ளுந்து யின்றுநாடத்தி முன்பு வந்ததிருமாலும்
நாடத்த டஞ்சி லம்பை மாவைப்பி ளந்த டர்ந்துநாகத்த லங்கு லுங்கவிடும்வேலா
ஆலித்தெ ழுந்த டர்ந்த ஆலத்தை யுண்ட கண்டராகத்தில் மங்கை பங்கர்நடமாடும்
ஆதிக்கு மைந்த னென்று நீதிக்குள் நின்ற அன்பர்ஆபத்தி லஞ்ச லென்றபெருமாளே.
