பாடல் 1201
விரைசொரியு ம்ருகமதமு மலரும் வாய்த்திலகு
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தனதனன தனன தாத்ததனதனதனன தனதனன தனன தாத்ததனதனதனன தனதனன தனன தாத்ததனதனதான
பாடல் வரிகள்
விரைசொரியு ம்ருகமதமு மலரும் வாய்த்திலகுவிரிகுழலு மவிழநறு மெழுகு கோட்டுமுலைமிசையில்வரு பகலொளியை வெருவ வோட்டுமணிவகையாரம்
விடுதொடைகள் நகநுதியி லறவும் வாய்த்தொளிரவிழிசெருக மொழிபதற அமுது தேக்கியகைவிதறிவளை கலகலென அழகு மேற்பொழியஅலர்மேவும்
இருசரண பரிபுரசு ருதிக ளார்க்கவசமிலகுகடல் கரைபுரள இனிமை கூட்டியுளமிதம்விளைய இருவரெனு மளவு காட்டரியஅநுராகத்
திடைமுழுகி யெனதுமன தழியு நாட்களினுமிருசரண இயலும்வினை யெறியும் வேற்கரமுமெழுதரிய திருமுகமு மருளு மேத்தும்வகைதரவேணும்
அரிபிரம ரடிவருட வுததி கோத்தலறஅடல்வடவை யனலுமிழ அலகை கூட்டமிடஅணிநிணமு மலைபெருக அறையும் வாச்சியமுமகலாது
அடல்கழுகு கொடிகெருட னிடைவி டாக்கணமுமறுகுறளு மெறிகுருதி நதியின் மேற்பரவஅருணரண முகவயிர வர்களு மார்ப்பரவமிடநாளும்
பரவுநிசி சரர்முடிகள் படியின் மேற்குவியபவுரிகொடு திரியவரை பலவும் வேர்ப்பறியபகர்வரிய ககனமுக டிடிய வேட்டைவருமயில்வீரா
படருநெறி சடையுடைய இறைவர் கேட்குரியபழயமறை தருமவுன வழியை யார்க்குமொருபரமகுரு பரனெனவு மறிவு காட்டவலபெருமாளே.
