பாடல் 1203
அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- ஸாமா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (5 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தனதான தந்த தந்த தனதான தந்த தந்ததனதான தந்த தந்ததனதான
பாடல் வரிகள்
அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்கஅபராதம் வந்து கெட்டபிணமுடி
அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்கஅனலோட ழன்று செத்துவிடுமாபோற்
கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்தகலியோடி றந்து சுத்தவெளியாகிக்
களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்திகதியேற அன்பு வைத்துனருள்தாராய்
சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்ததழல்மேனி யன்சி ரித்தொர்புர்முணும்
தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்ததழல்பார்வை யன்ற ளித்தகுருநாதா
மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம்வெளியாக வந்து நிர்த்தமருள்வோனே
மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்கு றத்திமிகுமாலொ டன்பு வைத்தபெருமாளே.
