உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1138

உ ரைத்த பற்றுட னடிகள்ப ணிந்திட்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்த தத்தன தனதன தந்தத்தனத்த தத்தன தனதன தந்தத்தனத்த தத்தன தனதன தந்தத்தனதான

பாடல் வரிகள்

உ ரைத்த பற்றுட னடிகள்ப ணிந்திட்டிருத்தி மெத்தென இளநகை யுஞ்சற்றுமிழ்த்த டைக்கல மெனஎதிர் கும்பிட்டணைமேல்வீழ்ந்

துடுத்த பொற்றுகி லகலல்கு லுந்தொட்டெடுத்த ணைத்திதழ் பெருகமு தந்துய்த்துனக்கெ னக்கென வுருகிமு யங்கிட்டுளும்வேறாய்

அருக்கி யத்தனை யெனுமவ சம்பட்டறுத்தொ துக்கிய நகநுதி யுந்தைத்தறப்பி தற்றிட அமளிக லங்கித்தடுமாறி

அளைத்து ழைத்திரு விழிகள்சி வந்திட்டயர்த்தி தத்தொடு மொழிபவ ருந்திக்கடுத்த கப்படு கலவியில் நொந்தெய்த்திடலாமோ

தரைக்க டற்புகு நிருதர்த யங்கச்சளப்ப டத்தட முடிகள்பி டுங்தித்தகர்த்தொ லித்தெழு மலையொடு துண்டப்பிறைசூடி

தனுக்கி ரித்திரிதரஎதி ருங்கொக்கினைப்ப தைத்துட லலறிட வஞ்சத்தருக்க டக்கிய சமர்பொரு துங்கத்தனிவேலா

பருப்ப தப்ரிய குறுமுனி வந்தித்திருக்கு முத்தம நிருதர்க லங்கப்படைப்பெ லத்தொடு பழயக்ர வுஞ்சக்கிரிசாடிப்

படர்ப்ப றைக்குரு குடலுதி ரங்குக்குடக்கொ டிக்கிடு குமரகொ டுங்கற்பதத்தி றுத்துகு பசியசி கண்டிப்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →