பாடல் 1137
உ மையெனு மயில்பெற்ற மயில்வா கனனே
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தனதத்த தனனா தனனாதனதன தனதத்த தனனா தனனாதனதன தனதத்த தனனா தனனாதனதான
பாடல் வரிகள்
உ மையெனு மயில்பெற்ற மயில்வா கனனேவனிதைய ரறுவர்க்கு மொருபா லகனேஉ ளமுரு கியபத்த ருறவே மறவேனெனவோதி
உ ருகுத லொருசற்று மறியேன் வறியேன்இ ருவினை யிடையிட்ட கொடியே னடியேன்உ ணர்விலி பெறமுத்தி தருவாய் துகிர்வாய்மடமாதர்
அமையென வளர்சித்ர இருதோள் தழுவாஅமுதென மதுரித்த கனிவா யணுகாஅமளியி லணைவுற்ற அநுரா கமகோததமுழ்கி
அநவர தமுமுற்ற மணிமா முலைதோய்கலவியி னலமற்ப சுகமா கினுமாஅநுபவ மிதுசற்றும் விடவோ இயலாதியலாதே
தமனிய குலசக்ர கிரியோ கடலோவிடமென முடிவைத்த முதுபே ரிருளோதனுவென முனையிட்ட கொநல்மு விலைவேல்கொடுபார்வை
தழலெழ வருமுக்ர எமபா தகனோயுகஇறு தியில்மிக்க வடவா னலமோதனியிவ னெனமிக்க பிசிதா சனபூபதியாகி
இமையவ ரனைவர்க்கும் அறையோ அறையோஅரியயன் முழுதுக்கும் அறையோ அறையோஎழுபுவி யுலகுக்கும் அறையோ அறையோபொரவாரும்
எனவரு மொருதுட்டன் முறையோ முறையோவடகுல கிரியெட்டும் அபிதா அபிதாஎனவொரு அயில்தொட்ட அரசே யிமையோர்பெருமாளே.
