பாடல் 1136
இலகிய வேலோ சேலோ ஒளிவிடு வாளோ போதோ
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தானா தானா தனதன தானா தானாதனதன தானா தானாதனதான
பாடல் வரிகள்
இலகிய வேலோ சேலோ ஒளிவிடு வாளோ போதோஎமன்விடு தூதோ மானோவிடமீதோ
எனவிழி கூறா வாரா அரிவையர் தேர்ளு டாடாஇறுதியில் வேறாய் மாறாநினைவாலே
பலபல கோளாய் மாலா யுழலும தானால் வீணேபடிறுசொ லாகா லோகாயதனாகிப்
பரிவுட னாடாய் வீடா யடிமையு மீடே றாதேபணிதியில் மூழ்கா மாயாவிடுவேனோ
அலைகடல் கோகோ கோகோ எனவுரை கூறா வோடாஅவுணரை வாடா போடாஎனலாகி
அழகிய வேலால் வாளால் நிலவிய சீரா வாலேயவருடல் வாணா ளீராஎதிராகி
மலைமிகு தோளா போதா அழகிய வாலா பாலாமகபதி வாழ்வே சேயேமயில்வீரா
மறைதொழு கோவே தேவே நறை செறி பூவே நீரேவளவிய வேளே மேலோர்பெருமாளே.
