பாடல் 1132
இரவினிடை வேள்தொ டுத்து டன்று
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தான தத்த தந்ததனதனன தான தத்த தந்ததனதனன தான தத்த தந்ததனதான
பாடல் வரிகள்
இரவினிடை வேள்தொ டுத்து டன்றுமுறுகுமலர் வாளி யைப்பி ணங்கியிருகுழையு மோதி யப்ப டங்குகடலோடே
எதிர்பொருது மானி னைத்து ரந்துசலதிகிழி வேல்த னைப்பொ ருந்தியினியமுத ஆல முற்ற கண்கள்வலையாலே
முரணிளைஞ ராவி யைத்தொ டர்ந்துவிசிறிவளை மாத ரைக்க லந்துமொழியதர கோவை யிக்க ருந்தியமுதாகு
முகிழ்முகுளி தார வெற்ப ணைந்துசுழிமிதுன வாவி யிற்பு குந்துமுழுகியழி யாம னற்ப தங்கள்தரவேணும்
திரையுலகு சாக ரத்தி லங்கைநகரிலுறை ராவ ணற்கி யைந்ததெசமுடியு மீரு பத்தொ ழுங்குதிணிதோளுஞ்
சிதையவொரு வாளி யைத்து ரந்தஅரிமருக தீத றக்க டந்துதெளிமருவு கார ணத்த மர்ந்தமுருகோனே
அரணமதிள் சூழ்பு ரத்தி ருந்துகருதுமொரு மூவ ருக்கி ரங்கியருளுமொரு நாய கற்ப ணிந்தகுருநாதா
அகல்முடிவை யாதி யைத்தெ ளிந்துஇரவுபகலாக நெக்க விழ்ந்தஅடியவர்கள் பாட லுக்கி சைந்தபெருமாளே.
