பாடல் 1131
இடர்மொய்த்துத் தொடரிற்பொய்க் குடிலக்கிக் கிடையிட்டிட்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத்தனதத்தத் தனதத்தத்தனதான
பாடல் வரிகள்
இடர்மொய்த்துத் தொடரிற்பொய்க் குடிலக்கிக் கிடையிட்டிட்டினிமைச்சுற் றமுமற்றைப்புதல்வோரும்
இனமொப்பித் திசையச்சொற் பலகத்திட் டிழியப்பிற்கிடையத்துக் கமும்விட்டிட்டவரேக
விடமெத்தச் சொரிசெக்கட் சமன்வெட்டத் தனமுற்றிட்டுயிர்வித்துத் தனையெற்றிக்கொடுபோமுன்
வினைபற்றற் றறநித்தப் புதுமைச்சொற் கொடுவெட்சிப்புயவெற்றிப் புகழ்செப்பப்பெறுவேனோ
அடர்செக்கர்ச் சடையிற்பொற் பிறையப்புப் புனையப்பர்க்கறிவொக்கப் பொருள்கற்பித்திடுவோனே
அலகைக்குட் பசிதித்தப் பலகைக்கொத் ததுபட்டிட்டலறக்குத் துறமுட்டிப்பொரும்வேலா
கடலுக்குட் படுசர்ப்பத் தினில்மெச்சத் துயில்பச்சைக்கிரிகைக்குட் டிகிரிக்கொற்றவன்மாயன்
கமலத்திற் பயில்நெட்டைக் குயவற்கெட் டிசையர்க்குக்கடவுட்சக் கிரவர்த்திப்பெருமாளே.
