பாடல் 1133
இரவொ டும்பக லேமா றாதே
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- தர்பரிகானடா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தந்தன தானா தானாதனன தந்தன தானா தானாதனன தந்தன தானா தானாதனதான
பாடல் வரிகள்
இரவொ டும்பக லேமா றாதேஅநுதி னந்துய ரோயா தேயேயெரியு முந்தியி னாலே மாலேபெரிதாகி
இரைகொ ளும்படி யூடே பாடேமிகுதி கொண்டொழி யாதே வாதேயிடைக ளின்சில நாளே போயேவயதாகி
நரைக ளும்பெரிதாயே போயேகிழவ னென்றொரு பேரே சார்வேநடைக ளும்பல தாறே மாறேவிழலாகி
நயன முந்தெரியாதே போனால்விடிவ தென்றடி யேனே தானேநடன் குஞ்சித வீடே கூடாதழிவேனோ
திருந லம்புரிதாளீ தூளீமகர குண்டலி மாண சூரிதிரிபு ரந்தழ லேவீ சார்வீயபிராமி
சிவனி டந்தரிநீலீ சூலீகவுரிபஞ்சவி யாயீ மாயீசிவைபெ ணம்பிகை வாலா சீலாஅருள்பாலா
அரவ கிங்கிணி வீரா தீராகிரிபு ரந்தொளிர் நாதா பாதாஅழகி ளங்குற மானார் தேனார்மணவாளா
அரிய ரன்பிர மாவோ ட்முவகைய ரிந்திர கோமா னீள்வானமரர் கந்தரு வானோ ரேனோர்பெருமாளே.
