உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1125

அரிய வஞ்சக ரறவே கொடியவர்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனன தந்தன தனனா தனதனதந்தன தனனா தனதனதனன தந்தன தனனா தனதனதனதான

பாடல் வரிகள்

அரிய வஞ்சக ரறவே கொடியவர்அவலர் வன்கண ரினியா ரவகுணர்அசட ரன்பில ரவமே திரிபவர்அதிமோக

அலையில் மண்டிய வழியே யொழுகியர்வினைநி ரம்பிடு பவமே செறிபவர்அருள்து றந்தவ ரிடம்வாழ் சவலைகள்நரகேற

உ ரிய சஞ்சல மதியா னதுபெறுமனஇ டும்பர்க ளிடமே தெனஅவர்உ பய அங்கமு நிலையா கிடவொருகவியாலே

உ லக முண்டவர் மதனா ரிமையவர்தருவெ னும்படி மொழியா வவர்தரஉ ளது கொண்டுயி ரவமே விடுவதுதவிராதோ

கரிய கொந்தள மலையா ளிருதனஅமுது ணுங்குரு பரனே திரைபடுகடல டும்படி கணையே வியஅரிமருகோனே

கருணை கொண்டொரு குறமா மகளிடைகலவி தங்கிய குமரா மயில்மிசைகடுகி யெண்டிசை நொடியே வலம்வருமிளையோனே

திரிபு ரங்கனல் நகையா லெரிசெய்துபொதுந டம்புரியரனா ரிடமுறைசிவைச வுந்தரியுமையா ளருளியபுதல்வோனே

சிகர வெண்கரிஅயிரா வதமிசைவருபு ரந்தர னமரா பதியவர்சிறைவி டும்படி வடிவேல் விடவலபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →