உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1124

நடை - தகதகிட

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை (35)(எடுப்பு - /4/4/4 0)

பாடல் வரிகள்

நடை - தகதகிட

தனதனன தனதனன தந்தந்த தத்ததனதனதனன தனதனன தந்தந்த தத்ததனதனதனன தனதனன தந்தந்த தத்ததனதத்ததன தான

அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளுமாய

அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரியமுடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறியஅணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொருகாலம்

நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனைநிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனைநிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெருமானும்

நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடுபரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழையநினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள்வாயே

தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகுடிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகுதகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகுதீதோ

தனதனன தனதனன தந்தந்த னத்ததனடுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடுதரரரர ரிரிரிரிரியென்றென்றி டக்கையுமு டுக்கையுமியாவும்

மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநடமுடுகுபயி ரவர்பவுரிகொண்டின்பு றப்படுக ளத்திலொருகோடி

முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதிநதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிடமுரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்தபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →