பாடல் 1126
ஆராத காத லாகி மாதர்த
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- திலங்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (7 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2தானான தான தான தானனதானான தான தான தானனதானான தான தான தானனதந்ததான
பாடல் வரிகள்
ஆராத காத லாகி மாதர்தமாபாத சூட மீதி லேவிழியாலோல னாய்வி கார மாகியிலஞ்சியாலே
ஆசாப சாசு மூடி மேலிடஆசார வீன னாகி யேமிகஆபாச னாகி யோடி நாளுமழிந்திடாதே
ஈராறு தோளு மாறு மாமுகமோடாரு நீப வாச மாலையுமேறான தோகை நீல வாசியுமன்பினாலே
ஏனோரு மோது மாறு தீதறநானாசு பாடி யாடி நாடொறுமீடேறு மாறு ஞான போதகமன்புறாதோ
வாராகி நீள்க பாலி மாலினிமாமாயி யாயி தேவி யாமளைவாசாம கோச ராப ராபரையிங்குளாயி
வாதாடி மோடி காடு காளுமைமாஞால லீலி யால போசனிமாகாளி சூலி வாலை யோகினியம்பவானி
சூராரி மாபு ராரிகோமளைதூளாய பூதி பூசு நாரணிசோணாச லாதி லோக நாயகிதந்தவாழ்வே
தோளாலும் வாளி னாலு மாறிடுதோலாத வான நாடு சூறைகொள்சூராரியேவி சாக னேசுரர்தம்பிரானே.
