Song 960
கீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுக
- Sthalam
- மதுரை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தானதன தத்ததன தத்ததனதான தானதன தத்ததன தத்ததனதான தானதன தத்ததன தத்ததனதத்ததான
Lyrics
கீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுகமாய வேல்விழிபு ரட்டிநகை முத்தமெழதேமல் மார்பினிள பொற்கிரிப ளப்பளெனதொங்கலாரஞ்
சேரு மோவியமெ னச்சடமி னுக்கிவெகுவாசை நேசமும்வி ளைத்துஇடை யுற்றவரிசேலை காலில்விழ விட்டுநடை யிட்டுமயிலின்கலாபச்
சாதி யாமெனவெ ருட்டிநட மிட்டுவலையான பேர்தமையி ரக்கவகை யிட்டுகொடிசாக நோய்பிணிகொ டுத்திடர்ப டுத்துவர்கள்பங்கினூடே
தாவி மூழ்கிமதி கெட்டவல முற்றவனைபாவ மானபிற விக்கடலு ழப்பவனைதாரு லாவுபத பத்தியிலி ருத்துவதுமெந்தநாளோ
வாத வூரனைம தித்தொருகு ருக்களெனஞான பாதம்வெளி யிட்டுநரி யிற்குழுவைவாசி யாமெனந டத்துவகை யுற்றரசனன்புகாண
மாடை யாடைதர பற்றிமுன கைத்துவைகையாறின் மீதுநட மிட்டுமணெ டுத்துமகிழ்மாது வாணிதரு பிட்டுநுகர் பித்தனருள்கந்தவேளே
வேத லோகர்பொனி லத்தர்தவ சித்தரதிபார சீலமுனி வர்க்கமுறை யிட்டலறவேலை யேவியவு ணக்குலமி றக்கநகைகொண்டசீலா
வேத மீணகம லக்கணர்மெய் பச்சைரகுராம ¡£ணமயி லொக்கமது ரைப்பதியின்மேவி வாழமரர் முத்தர்சிவ பத்தர்பணிதம்பிரானே.
