Song 961
புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி
- Sthalam
- மதுரை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனத் தந்தன தந்தன தனதனதனனத் தந்தன தந்தன தனதனதனனத் தந்தன தந்தன தனதனதனதான
Lyrics
புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழியெறியக் கொங்கையி ரண்டெனு மதகரிபொரமுத் தந்தரு மிங்கித நயவிதமதனாலே
புகலச் சங்கிசை கண்டம தனிலெழஉ ருவச் செந்துவர் தந்தத ரமுமருள்புதுமைத் தம்பல முஞ்சில தரவருமனதாலே
பருகித் தின்றிட லஞ்சுக மெனமனதுருகிக் குங்கும சந்தன மதிவியர்படியச் சம்ப்ரம ரஞ்சித மருள்கலவியினாலே
பலருக் குங்கடை யென்றனை யிகழவுமயலைத் தந்தரு மங்கையர் தமைவெகுபலமிற் கொண்டிடு வண்டனு முனதடிபணிவேனோ
திருவைக் கொண்டொரு தண்டக வனமிசைவரவச் சங்கொடு வந்திடு முழையுடல்சிதறக் கண்டக வெங்கர னொடுதிரிசிரனோடு
திரமிற் றங்கிய கும்பக னொருபதுதலைபெற் றும்பரை வென்றிடு மவனொடுசிலையிற் கொன்றமு குந்தன லகமகிழ்மருகோனே
மருவைத் துன்றிய பைங்குழ லுமையவள்சிவனுக் கன்பரு ளம்பிகை கவுரிகைமலையத் தன்தரு சங்கரி கருணைசெய்முருகோனே
வடவெற் பங்கய லன்றணி குசசரவணையிற் றங்கிய பங்கய முகதமிழ்மதுரைச் சங்கிலி மண்டப இமையவர்பெருமாளே.
