Song 959
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
- Sthalam
- மதுரை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்த தாத்தன தனதன தனதனதனத்த தாத்தன தனதன தனதனதனத்த தாத்தன தனதன தனதனதனதனத் தனதான
Lyrics
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமைஒருத்தர் வாய்ச்சுரு ளொருவர்கை யுதவுவர்பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர்அளவளப் பதனாலே
படுக்கை வீட்டுனு ளவுஷத முதவுவர்அணைப்பர் கார்த்திகை வருதென வுறுபொருள்பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகெனஅவரவர்க் குறவாயே
அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரைமுடிக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர்அலட்டி னாற்பிணை யெருதென மயலெனுநரகினிற் சுழல்வேனோ
அவத்த மாய்ச்சில படுகுழி தனில்விழும்விபத்தை நீக்கியு னடியவ ரருடனெனைஅமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்துகதிதனைத் தருவாயே
தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுளகுருக்கள் போற்சிவ நெறிதனை யடைவொடுதகப்ப னார்க்கொரு செவிதனி லுரைசெய்தமுருகவித் தகவேளே
சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்திருட்டு ராக்கத னுடலது துணிசெய்துசயத்த யோத்தியில் வருபவ னரிதிருமருமகப் பரிவோனே
செழித்த வேற்றனை யசுரர்க ளுடலதுபிளக்க வோச்சிய பிறகம ரர்கள்பதிசெலுத்தி யீட்டிய சுரபதி மகள்தனைமணமதுற் றிடுவோனே
திறத்தி னாற்பல சமணரை யெதிரெதிர்கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடுதிருத்த மாய்ப்புகழ் மதுரையி லுறைதரும்அறுமுகப் பெருமாளே.
