Song 94
மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- சங்கரானந்தப்ரியா
- Thalam
- அங்கதாளம் (9)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2தானதன தான தானந்த தானந்ததானதன தான தானந்த தானந்ததானதன தான தானந்த தானந்ததனதான
Lyrics
மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்துபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்முடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சியதிபார
மோகநினை வான போகஞ்செய் வேனண்டர்தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்றமுலபர யோக மேல்கொண் டிடாநின்றதுளதாகி
நாளுமதி வேக கால்கொண்டு தீமண்டவாசியன லுடு போயொன்றி வானின்கணாமமதி மீதி லுறுங்க லாஇன்பஅமுதூறல்
நாடியதன் மீது போய்நின்ற அநந்தமேலைவெளி யேறி நீயின்றி நானின்றிநாடியினும் வேறு தானின்றி வாழ்கின்றதொருநாளே
காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல்பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்தகாலன்விழ மோது சாமுண்டி பாரம்பொடனல்வாயு
காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சிஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கைகாளிநட மாடி நாளன்பர் தாம்வந்துதொழுமாது
வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்குசோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல்வாழுமுமை மாத ராள்மைந்த னேயெந்தையிளையோனே
மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்றுதேடிவிளை யாடி யேயங்ங னேநின்றுவாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்றபெருமாளே.
