Song 93
மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- மாயா மாளவ கெளளை
- Thalam
- ஆதி - 2 களை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாத்தத் தத்தன தாத்தத் தத்தனதாத்தத் தத்தனதனதான
Lyrics
மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெருமூச்சுற் றுச்செயல்தடுமாறி
முர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிடமூக்குக் குட்சளியிளையோடும்
கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடுகூட்டிற் புக்குயிரலையாமுன்
கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்கூட்டிச் சற்றருள்புரிவாயே
காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்காப்பைக் கட்டவர்குருநாதா
காட்டுக் குட்குற வாட்டிக் குப்பலகாப்புக் குத்திரமொழிவோனே
வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்வாய்க்குச் சித்திரமுருகோனே
வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலைவாய்க்குட் பொற்பமர்பெருமாளே.
