Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 92

முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தந்த தந்த தனன தந்த தந்ததனன தந்த தந்ததனதான

Lyrics

முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்குமுறுவ லுஞ்சி வந்தகனிவாயும்

முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்தமுகிலு மின்ப சிங்கிவிழிவேலும்

சிலைமு கங்க லந்த திலத முங்கு ளிர்ந்ததிருமு கந்த தும்புகுறுவேர்வும்

தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்றுசெயல ழிந்து ழன்றுதிரிவேனோ

மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டுவழிதி றந்த செங்கைவடிவேலா

வளர்பு னம்ப யின்ற குறம டந்தை கொங்கைமணிவ டம்பு தைந்தபுயவேளே

அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்கமலறி வந்து கஞ்சமலர்மீதே

அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்றஅரிய செந்தில் வந்தபெருமாளே.

All songs →